இலங்கை செய்திகள்

குறைவடைந்த உப்பின் விலை- உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

குறைவடைந்த உப்பின் விலை- உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், உப்பின் விலை குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்தமையே இலங்கையில் உப்பு விலை குறைந்தமைக்கு காரணம் என்று புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் இன்றி இந்தியாவிலிருந்து உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதுர்தீன் கோரியுள்ளார்.

Related Articles

Back to top button