இலங்கை செய்திகள்

மற்றுமொரு நோய் தொடர்பில் இலங்கை மக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!

மற்றுமொரு நோய் தொடர்பில் இலங்கை மக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு உள்ளான பல நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிவதால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் , ஒரே முகக்கவசத்தை மற்றும் அழுக்கு முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிந்திருப்பது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

குறித்த நோயாளிக்கு மூக்கின் உட்புறத்திலும், ஒரு கண்ணிலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இது போன்ற பல நோயாளிகள் சிகிச்சை பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்ததாகவும் கூறப்படுகின்றது.

Source. New lanka

Related Articles

Back to top button