சாரதிகளுக்கு தற்போது வெளியாகியுள்ளன மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்..
சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வேலைத் திட்டத்தை பார்வையிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவது தொடர்பில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பெரும்பாலும் தண்டப்பணம் செலுத்தும் போது ஏதாவது ஒரு இடத்தில் தவறு செய்தால் தண்டப்பணம் செலுலுத்தி சாரதி அணுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுக்கும்.
5 அல்லது 6 நிமிடங்களில் சொந்த கிரெடிட் கார்ட்டினூடாக பணம் செலுத்தி அல்லது வேறு வழிகளில் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கான வழியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்