இலங்கை செய்திகள்

இலங்கையில் இனி பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – பஷில் அறிவிப்பு..

இலங்கையில் இனி பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - பஷில் அறிவிப்பு..

இலங்கையில் இனி பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – பஷில் அறிவிப்பு..

இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வரிசைகளில் நிற்பதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் ஊடாக எரிபொருள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள், தொழில்துறை மூலப் பொருட்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக மேலும் 1500 மில்லியன் டொலர் கடன் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிற்கு தேவையான பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நன்றி – New lanka

Related Articles

Back to top button