இந்திய செய்திகள்

பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர் எடுத்து விபரீத முடிவு.

பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்.
கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர் எடுத்து விபரீத முடிவு.

ராஜஸ்தான் மாநிலம், லால்சொட் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. மருத்துவரான இவர் தனது கணவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காகச் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.

இவருக்கு அர்ச்சனா ஷர்மாதான் பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையே அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அர்ச்சனா தன வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்ததால் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button