இலங்கை செய்திகள்

வார இறுதி நாட்களில் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள்…

எதிர்வரும் வார இறுதி நாட்கள்களில் நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமையன்று இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேபோல், ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி நேரம் வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும்.

இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button