இலங்கை செய்திகள்

நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த?….

நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த?….

புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும்

முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகரவிற்கு பதவி வழங்கப்படுவதில்லை எனவும்

தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிதி அமைச்சராகவும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் முதல் நிதி அமைச்சராகவும் மஹிந்த ராஜபக்ஷ பணியாற்றினார்.

இருப்பினும் பின்னர் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி வகித்திருந்ததோடு, அமைச்சரவை இராஜினாமா செய்ததையடுத்து, அலி சப்ரி 24 மணி நேரத்திற்கும் குறைவாக நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – Battinews

Related Articles

Back to top button