இலங்கை செய்திகள்

இனி கிராமங்களுக்கு சமையல் எரிவாயு கிடையாது.

இனி கிராமங்களுக்கு சமையல் எரிவாயு கிடையாது.

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அன்றாடம் 60,000 தொடக்கம் 80,000 வரை விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயுவை, 30ஆயிரமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

நாட்டின் முழுமையான சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதாயின் மாதாந்தம் 30 மில்லியன் டொலர் தேவை என்றும் தற்போதைய நிலையின் கீழ், இதற்காக செலவு செய்ய முடியாதிருப்பதுடன் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.

எனவே விறகு உள்ளிட்ட ஏனைய எரிபொருளை பயன்படுத்தக் கூடிய சகலரும் மீண்டும் பழைய முறைக்கே செல்வது அவசியம் என்றும் இதுவே நாட்டுக்காக செய்ய கூடிய பெரிய அர்ப்பணிப்பு என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி – New lanka

Related Articles

Back to top button