இலங்கை செய்திகள்

அரிசியின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவித்தல்.

அரிசியின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவித்தல்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையொன்று நிர்ணயிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வௌ்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வௌ்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நன்றி- Oosai.lk

Related Articles

Back to top button