இலங்கை செய்திகள்

முழுமையாக முடங்கப் போகும் இலங்கை – வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

முழுமையாக முடங்கப் போகும் இலங்கை – வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் ஹர்த்தாலுக்கு தயாராகி வருகின்றனர்

எதிர்வரும் 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அன்றைய தினம் அனைத்து அரச, அரை அரசாங்க, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் அரசாங்கத்திற்க்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.

Related Articles

Back to top button