சமையல் குறிப்புகள்

ஒரு கப் ரவை இருந்தால் இப்படி செஞ்சு பாருங்க..! அப்றம் விடவே மாட்டீங்க..

தேவையான பொருட்கள் 

வறுக்காத ரவை- ஒரு கப்

தண்ணீர்- மூன்று கப்பும், இரண்டு டேபிள் ஸ்பூனும்

சர்க்கரை- ஒன்றே முக்கால் கப்பும், மூன்று டேபிள்ஸ்பூனும்

நெய்- 3 டேபிள் ஸ்பூன்

முந்திரிப் பருப்பு- கொஞ்சமாக

ஏலக்காய் பொடி- சிறிதளவு

செய்முறை 

ஒரு பவுலில் ஒரு கப் வறுக்காத ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கப்பில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தல் வேண்டும். பின்னர் கையால் நன்றாக ரவையை கலந்து அழுத்தி பிசைய வேண்டும். அதாவது சக்கைத்தனியாக பால் தனியாக வரும் வரை பிசைந்து எடுக்க வேண்டும். பின்னர் வடிகட்டி எடுக்க வேண்டும். வரும் சக்கைகளை மறுபடியும் இன்னொரு கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து மறுபடியும் வடிக்கட்டிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 3 கப் ரவை பால் வரை வரும்.

அடுத்து ஒரு கடாயில் ஒன்றே முக்கால் கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைத்துக் கொண்டு இன்னுமொரு ஸ்டவ்வில் ஒரு பேணை வைத்து 3 மூன்று டேபிள் ஸ்பூன் சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கேரமலைஸ் செய்ய வேண்டும். சர்க்கரை கரைந்து கொதித்து வரும்போது தேன் நிறத்துக்கு வரும் போது அந்த நிலையில் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிவிட்டு ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் சர்க்கரையில் சேர்த்து விடல் வேண்டும்.

இவ்வாறு சேர்க்கும் போது அல்வா கோல்டன் கலரில் வரும். ஒரு கொதி வந்ததும் ரெடி பண்ணி வைத்த ரவை பாலை சிறிது கலந்து விட்ட பின் அதனையும் இதனுள் சேர்க்க வேண்டும்.ஸ்டவ் ஹைய் ப்ளேமிளே இருக்க வேண்டும். ரவை கட்டு விடாமல் இருக்க கைவிடாமல் கலந்து விட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும். பின்னர் கொதிக்க கொஞ்சம் கொஞ்சமாக திக்காகி நிறம் மாறி வரும் வேளையில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். நெய் சேர்த்தவுடன் அழகாக ஒன்றோடு ஒன்று ஈஸியாக கூடி வரும்.

இதனை செய்ய 20 தொடக்கம் 25 நிமிடங்கள் வரை எடுக்கும். இந்த ஸ்டேஜில் ஸ்டவ்வை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு செய்தல் வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து எடுத்த முந்திரிப்பருப்பு கொஞ்சம் சேர்த்து அத்துடன் ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக கெட்டியாக வந்த பின் இறக்குவதற்கு முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு ஒரு முறை கலந்து விட்டு இறக்கினால் எதிலும் ஒட்டாமல் சரியான பதத்திற்கு வரும்.

Related Articles

Back to top button