ஆன்மிகம்

பணக்கஷ்டம் நீங்க துளசி செடியை இந்த திசையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் போதும் பணக்கஷ்டம் நீங்கி பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணக்கஷ்டம் நீங்க துளசி செடியை இந்த திசையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் போதும் பணக்கஷ்டம் நீங்கி பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்து மதத்தில் துளசி செடி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அதனால் தான் பெரும்பாலான இந்துக்களின் வீட்டில் துளசி செடி இருக்கும்.

வாஸ்துபடி துளசி செடியை வைத்து வளர்ப்பது நிதி மேம்பாட்டை தரும். மத நம்பிக்கைகளின்படி, துளசி செடியில் லட்சுமி தேவி குடியிருக்கிறாள்.

இதை வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றல் தங்கும். முறையாக வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும்.

துளசியின் வேரும் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. நிதி நெருக்கடி பிரச்சனைகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் துளசி வேருக்கு பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைச் செய்வதன் மூலம் ஒரு நபரின் அனைத்து கஷ்டங்களும் விலகிவிடும்.

பணம் சேர பரிகாரம்:

பணப்பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டால், தினமும் காலையில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். மாலையில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

இதனால், பணம் பெறுவதற்கான அனைத்து வழிகளும் தடையின்றி காணப்படும். துளசி வேரை எடுத்து வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்தில் அணியவும்.

இதை செய்வதன் மூலம், விரைவில் பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய பொருளாதார நிலையும் மேம்படும். மகாலட்சுமியும் இந்த பரிகாரத்தை செய்வதால் மனங்குளிர்வாள்.

கிரக அமைதிக்கு பரிகாரம்:

ஜாதகத்தில் கிரகங்களின் நிலை அசுபமாக இருந்தால், துளசியை வழிபட்ட பின், அதில் இருந்து சிறிது வேரை எடுத்துக் கொள்ளவும்.

இதற்குப் பிறகு, அதை ஒரு சிவப்பு நிற துணியில் அதைக் கட்டி அல்லது ஒரு வெள்ளி தாயத்தில் வைத்து அதை உங்கள் கையில் கட்டவும். இதன் மூலம் கிரக தோஷங்களில் இருந்து விடுதலை கொடுக்கும்.

வேலையில் வெற்றி பெற பரிகாரம்:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையில் தோல்வி கிடைத்தால் அல்லது உங்கள் வேலை தடைபட்டால், சிறிது துளசி வேரை எடுத்து கங்கை நீரில் கழுவி வழிபட வேண்டும்.

அதன் பிறகு, துளசி வேரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி, உங்களுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம், நீங்கள் உடனடியாக பலன்களை பெறுவீர்கள், மேலும் உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும்.

எதிர்மறை சக்தியை நீங்க பரிகாரம்:

துளசி நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. நீங்கள் வீட்டில் துளசி செடியை நட்டு வளர்த்தால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவுகிறது. துளசி வேர் மாலையை அணிவதால் எதிர்மறை சக்திகள் விலகும்.

குறிப்பு. இந்த தகவல் Asian net எனும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.

இந்த பதிவில் ஏதேனும் குறை மற்றும் பதிவினை நீக்குவது தொடர்பில் fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரியபடுத்தவும்

Related Articles

Back to top button