இந்த திசையில் இந்த செடியை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
இந்த திசையில் இந்த செடியை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்
நாம் அனைவருமே பணத்திற்காக தான் ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனெனில் பணம் இருந்தால் தான் இவ்வுலகில் வாழ முடியும் என்ற நிலைமையில் உள்ளோம்.
ஆனால் அப்படி சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைத்திருக்கிறதா என்றால், பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள்.
ஒருவரது வீட்டில் பணம் சேராமல் செலவாகிக் கொண்டிருக்கிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளானது தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புடையது.
இந்த பகுதிகளில் ஏதேனும் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், ஒருவர் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
அதே வேளையில் இவ்விரு திசைகளிலும் ஏதேனும் சிறு தவறு செய்தாலும், அது பொருளாதார சிக்கல்களை சந்திக்க வைக்கும்.
மேலும் ஒருவரது வீட்டில் பணம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், நிதி வளர்ச்சிக்காக ஒருசில பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இப்போது அவை என்னவென்பதையும், எங்கு வைக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
நீல நிற பிரமீடு
வாஸ்து சாஸ்திரத்தில் நீல நிற பிரமீடு மங்களகரமான ஒரு பொருளாக கருதப்படுகிறது.
அதுவும் இந்த பிரமீடை வீட்டின் குபேர திசையான வடக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது.
இப்படி இந்த திசையில் நீல நிற பிரமீடை வைக்கும் போது, வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்கும் மற்றும் பண பற்றாக்குறையே ஏற்படாது.
கண்ணாடி பௌல் நீர்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் அல்லது பணம் அதிகம் சேர வேண்டும் என்று விரும்பினால், ஒரு கண்ணாடி பௌலில் நீரை நிரப்பி,
அதை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதுவும் அந்த நீரில் ஒரு வெள்ளி நாணயத்தை போட்டு வைக்க வேண்டும்.
இப்படி வைப்பதன் மூலம், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசியும், அருளும் எப்போதும் அந்த வீட்டிற்கு இருக்கும்.
இதன் விளைவாக வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்கும்.
துளசி மற்றும் நெல்லி செடி
துளசி செடியானது லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்டுகிறது.
இது தவிர, நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வடக்கு திசையில் வைத்து வளர்ப்பதும் நல்லது.
இது வீட்டில் நிதி முன்னேற்றத்திற்கு உதவி புரிந்து, வீட்டை செல்வ செழிப்போது வைத்திருக்க உதவும்.
விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய தெய்வங்களின் சிலை என்றால் அது விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலையாகும்.
அதுவும் இந்த சிலைகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். அதோடு இந்த சிலைகளுக்கு முன் தினமும் ஒரு மண் விளக்கை ஏற்ற வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், வீட்டில் பண பற்றாக்குறை எப்போதும் ஏற்படாது
வடக்கு திசை
வாஸ்துப்படி, வடக்கு திசையானது செல்வத்தின் தெய்வமான குபேரர் குடியிருக்கும் திசை.
ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், இந்த குபேர திசையில் பணப் பெட்டியை வைத்து பயன்படுத்த வேண்டும்.
இப்படி செய்யும் போது, வீட்டில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும் மற்றும் பண பிரச்சனையே வராது.
பொறுப்புத் துறப்பு . இந்த தகவல் https://tamil.boldsky.com/ எனும் இணையதத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த பதிவினை நீக்குவது எனின் எமது fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிய படுத்துங்கள்.