ஆன்மிகம்

தீராத கடனும் தீர்ந்து பணம் சேர இந்த மந்திரத்தை சொல்லி இந்த பொருளை வீட்டில் இந்த இடத்தில் மறைத்து வைத்தால் கோடி கடனும் தீர்ந்து நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

தீராத கடனும் தீர்ந்து பணம் சேர இந்த மந்திரத்தை சொல்லி இந்த பொருளை வீட்டில் இந்த இடத்தில் மறைத்து வைத்தால் கோடி கடனும் தீர்ந்து நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.

வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும்.

அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.

பணவரவு அதிகரிக்க :

தொழில் செய்பவராக இருந்தாலும், மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி வரும் வருமானம் உயர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள்.

ஆனால் இப்படி அனைவருக்கும் நடக்கிறதா என்றால் இல்லை என்று தான் பெரும்பாலானவர்கள் பதிலளிப்பார்கள்.

கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை…வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது…

திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது.

கையில் பணம் வரவும் மாட்டேன் என்கிறது, அப்படியே வந்தாலும் வரும் பணம் கையில் தங்கவும் மாட்டேன் என்கிறது என புலம்பி, வருத்தப்படுபவர்களே அதிகம்.

பரிகாரம் :

எத்தனையோ கோவிலுக்கு போய்விட்டோம், பார்க்கும் ஒவ்வொருவரும் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தையும் செய்து,

பல மந்திரங்களையும் சொல்லியும் எந்த பலனும் இல்லை. வருமானம் பெருகுவதற்கு வழியே இல்லையா என வருத்தப்படுபவர்களுக்கு எளிய பரிகாரத்தின் மூலமே தீர்வை பெற முடியும்.

வருமானத்தை பெருக்கும் பரிகாரம் :

இதற்கு கையில் வருமானம் வந்ததும் அல்லது சம்பளம் வாங்கியதும் அந்த தொகையில் ஒரு சதவீதம் தொகையை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

அந்த பணத்தில் பாலால் செய்த இனிப்பு வகைகள், வாயில் போட்டாலே தித்திப்புடன் எளிதில் கரைந்து வாயிற்குள் போய் விடக் கூட இனிப்பு வகைகளை வாங்கி ஆதரவற்றோர், சாலையோர பணியாளர்கள், தூய்மை பணி செய்வோர், ஆதரவற்ற நிலையில் வறுமையில் வாடும் குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுங்கள்.

மகிழ்ச்சியுடன் உங்கள் கைகளால் இனிப்புக்களை கொடுங்கள். இப்படி செய்வதால் சனி – சுக்கிர யோகம் உண்டாகும். இதனால் வருமானம் பெருகுவதுடன், கையில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

வருமானத்திற்கு தடையோ, பஞ்சமோ வராது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும்

பணப்பிரச்சனை தீர வழி :

இது தவிர, மாத சம்பளம் வாங்கியதும் அல்லது கைக்கு வருமானம் வந்ததும் ஒவ்வொரு மாதமும் முதல் செலவாக வீட்டிற்கு கல் உப்பு, ஊறுகாய் போன்றவற்றை வாங்கி வைக்கலாம்.

கல் உப்பு, ஊறுகாய் போன்றவை மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

எந்த காரணத்திற்காகவும் இந்த பொருட்களை தானமாகவோ, கடனாவோ கொடுக்கக் கூடாது.

பணத்தை பெருக்கும் மந்திரம் :​

தினமும் வீட்டை சுத்தம் செய்து, அதிகாலையில் நீராடி, வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன் அமர்ந்து கீழுள்ள மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பணம் வீணாக விரயம் ஆகாமல், பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

“ஓம் யம் ஓம்
அங் சிவாய நம
சவ்வும் நம சிவாய நம
ஸ்ரீயும் நம சிவாய நம
அங் உங் வங் சிவாய நம”

Related Articles

Back to top button