இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்..

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்..

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாளை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கத் தயார் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் தொலைதூரப் பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பாத மாணவர்கள் தமது பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது..

பாடசாலைகள் திறப்பதற்கு முறையான திட்டம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினைக்கு எதிராக நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு ஏதாவது உடல் நல பாதிப்புகள் இருந்தால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 1 – 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button