இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்கின்றதா?. சற்று முன்னர் வெளிவந்துள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்கின்றதா?.
சற்று முன்னர் வெளிவந்துள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்

இதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 65 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோல்களுக்கு 49 ரூபாய் விலை அதிகரிப்பினை அறிவித்திருந்தது.

இந்நிலையில் லங்கா ஐஓசி நிறுவன முகாமையாளர் வெளியிட்ட கருத்திற்கமைய நட்டத்தினை ஈடு செய்வதற்காக மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button