இலங்கை செய்திகள்

பொது மக்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த ஓர் மகிழ்ச்சியான செய்தி..

பொது மக்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த ஓர் மகிழ்ச்சியான செய்தி..

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சலுகை விலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்காக மக்களுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னை அபிவிருத்திச் சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிலாபம் கரவிடகராய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் தென்னை கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்கி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Articles

Back to top button