இலங்கை செய்திகள்

இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மிகவும் முக்கியமான பொருள்.

இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மிகவும் முக்கியமான பொருள்.

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்திய கடன் வசதியின் கீழ், மருந்துகளை இறக்குமதி செய்வோருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர இலங்கை வங்கியூடாக 7 மில்லியன் டொலர் மற்றும் மக்கள் வங்கியூடாக 7 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிப்பதற்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நன்றி – மலையக குருவி

Related Articles

Back to top button